Categories
அரசியல் தேசிய செய்திகள்

என்ன நடக்குதுன்னே தெரியல…. யாரு தலைவருனு தெரியல…. கபில் சிபில் வேதனை…!!!

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில் சித்து மிகவும் ஆபத்தானவர் என்றும், அவரை கண்டிப்பாக தேர்தலில் தோற்கடிபோன் என்றும் அமரீந்தர் சிங்க் கூறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். மேலும் இதுகுறித்து அவர், தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் தொண்டராக காங்கிரசில் தொடர்வேன் என்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பஞ்சாபில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பம் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதிய 23 பேர்களின் சார்பாக நான் பேசுகிறேன்; கட்சியின் தலைவர் மத்திய தேர்தல் குழுவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய கருத்துக்களை தலைமை கேட்க வேண்டும்.

எங்களிடம் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் காங்கிரசுக்கு எதிரானவர்கள் அல்ல. நாம் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம்? என்று அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். காங்கிரஸ் தற்போது நிலைமையை பார்க்க முடியவில்லை. நமது கட்சியில் தலைவர் யார்? யார் முடிவு எடுக்கிறார்கள்? என்பது குறித்து தெரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோமா? என காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும்.

தலைமை குறித்து கடிதம் எழுதி 23 பேரும் வேறு எங்கும் செல்ல விரும்புவது கிடையாது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள் தான் வேறு கட்சிக்கு சென்றுள்ளார்கள். கட்சிக்கு நெருக்கமானவர்கள் அல்ல என தலைமை கருதியவர்கள் தான் தொடர்பில் உள்ளார்கள். காங்கிரசால் மட்டுமே நம்முடைய குடியரசை காப்பாற்ற முடியும். எனவே கட்சியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |