இத்தாலியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய பிரபல சமூக ஆர்வலர் உலக தலைவர்களை விமர்சனம் செய்துள்ளார்.
இத்தாலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக சர்வதேச அளவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலரான கிரேட்டா என்னும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பங்கேற்றுள்ளார்.
இதனையடுத்து சுற்றுசூழல் மாசுபாடு தொடர்பாக நடைபெற்ற அந்த மாநாட்டில் பேசிய கிரேட்டா உலகத் தலைவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உலகத் தலைவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் மாநாட்டின் மூலம் எதிர்வரும் இளைய சமுதாயத்தினர் கூறும் குறைகள் கேட்கப்படுவதாக அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் மாநாட்டில் பேசிய கிரேட்டா உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.