Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

இதற்காக பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டு அந்தக் கருத்துக்களை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  கொரோனா பரவல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசு நீடிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பு பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்த வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர்கள் விரும்பினால் மட்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |