தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. அதனை ரத்து செய்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி உறையூரை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு போன்றவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் மனுதாரர் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால் புதிதாக அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டன. மேலும் இந்த அரசாணையை எதிர்த்து தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இதனை அடுத்து முழுமையான விவரங்கள் ஏதுமில்லாமல் மனுத்தாக்கல் செய்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்காமல் பொதுநல வழக்கு தொடர மனுதாரருக்கு தடை விதித்துள்ளார். மேலும் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதிகள் விதித்துள்ளனர்.