நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதிகார பதவி கிடைத்து மதிப்பு மரியாதை கூடும். இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது, அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியை தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் நல்லபடியாகவே உங்களை வந்து சேரும். நீங்கள் ஆசைப்பட்ட பொருளை இன்று நீங்கள் வாங்க கூடும். சில நேரங்களில் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நெடுநாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். இலட்சியங்களும் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
நிதானத்தை மட்டும் எப்போதும் கைவிட்டு விடாதீர்கள். பெண்கள் வாழ்வில் குதுகலம் இருக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் கொஞ்சம் இயங்கும். எச்சரிக்கையாக இருங்கள். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து வித காரியம் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குவதால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தயவு செய்து இதை செய்வதற்கு முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்