Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. பாதுகாப்பை அதிகப்படுத்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 39,408 காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தைக்குறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |