Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு அறிவிப்பையும் வெளியிட்டார். பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டன. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் பட்சத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் தூய்மையாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |