Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “தேகத்தில் புதிய தெம்பு பிறக்கும்”… எந்த தடையும் இன்று இருக்காது..!!

சிந்தனையின் சொற்பமாக விளங்கக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரித்து தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு பிறக்கும். உல்லாசப் பயணங்கள் உற்சாகத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு இன்று சுகபோக வாழ்வு கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் விலகிச் செல்லும். எந்த தடையும் இன்று இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிகமாக முயற்சி செய்து முடிக்க வேண்டியிருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதோ  தீயில் வேலை செய்பவராகவோ  இருந்தால் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்து மனம் மகிழ்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.

இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணமும் மேலோங்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.  தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக தான் பேச வேண்டும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடைய அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விதமான காரியங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் முடிந்தால் நீங்கள் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |