அதீத உடல் கவர்ச்சி கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும். ஆடை, ஆபரணங்கள், அலங்கார பொருட்கள் சேரும். அழகாக உடை அணிந்து மகிழ்வீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். அதுபோலவே இன்று பொறுப்புகளும் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சாதிப்பீ ர்கள்.வெளியூர் பயணங்கள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சக மாணவர்களிடம் மட்டும் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். நீங்களும் மன மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்