நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3 தவணையாக 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பல விவசாயிகள் இன்னும் இதில் இணையாமல் இருக்கிறார்கள்.பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தில் இதுவரை தங்களைப் பதிவு செய்யாத தகுதியான விவசாயிகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், அதாவது இன்றுக்குள் தங்களை பதிவு செய்து கொண்டால் ரூ.4000 பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் அல்லது நவம்பரில் ரூ.2000 மற்றும் டிசம்பர் மாதத்திலும் ரூ.2000 தவணை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்:
* முதலில் PM Kisan-ன் (https://pmkisan.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் செல்ல வேண்டும்.
* வெப்சைட்டின் வலதுபுறம் கொடுக்கப்பட்டிருக்கும் Farmers Corner ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
* அங்கே முதலாவதாக உள்ள ‘New Farmer Registration’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
* பின் தகுதி வாய்ந்த விவசாயியின் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
* பின் அந்த விவசாயி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதயும் செலக்ட் செய்து, இதனுடன், கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்ய வேண்டும்.
* பின்னர் தோன்றும் படிவத்தில் குறிப்பிட்ட விவசாயின் முழு தனிப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும்.
* இதனுடன் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் விவசாயின் நிலம் தொடர்பான தகவல்கள் நிரப்பப்பட வேண்டும்.
* இறுதியாக தகுதி வாய்ந்த விவசாயின் தகவல்கள் நிரப்பப்பட்ட படிவத்தை சப்மிட் செய்ய வேண்டும்.