Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் ( 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். திண்டுக்கல்லில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு சென்னை சென்றடையும்.

மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் (06729) மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருப்பரங்குன்றம், நெல்லை, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.42, அதிகாலை 3.10, காலை 9 மணி, 9.11, 9.22, 9.30, 9.40 மணிக்கு பதிலாக இரவு 11.38, நள்ளிரவு 2.45, காலை 8.45, 8.55, 9.05, 9.15, 9.24 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் புனலூர்-மதுரை சிறப்பு ரெயில் (06730) திருமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும்.

பைசாபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (06794) மதுரை ரெயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும். சென்னை-காரைக்குடி பல்லவன் சிறப்பு ரெயில் (02605) புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கு புறப்படும். காரைக்குடி-திருச்சி டெமு சிறப்பு ரெயில்(வ.எண் 06126) புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர், குமாரமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 7.50, 8.03, 8.15, 8.30 மணிக்கு பதிலாக 7.45, 7.58, 8.10, 8.25 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |