அமெரிக்காவில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி ஐந்து நபர்களை கொன்ற நபருக்கு ஐந்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தின் அன்னபோலிஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 2018-ஆம் வருடத்தில், Jarrod Ramos என்ற நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பத்திரிகை அலுவலகத்தின் ஐந்து முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கிற்கான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது Jarrod, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் அவருக்கு 5 ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், நீதிமன்றம் இது குறித்து தெரிவித்துள்ளதவது, சட்டதிட்டங்களுக்கு இணங்கி அதிகபட்ச தண்டனையை குற்றவாளிக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு, சிறிதும் வருந்தவில்லை. இதனால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, அந்த பத்திரிகையானது, கடந்த 2011 ஆம் வருடத்தில், Jarrod குறித்த பாலியல் துன்புறுத்தல் பற்றி ஒரு கதையை வெளியிட்டிருக்கிறது. இதனால் பழிவாங்கும் நோக்கில், Jarrod அந்த பத்திரிகை அலுவலகத்தில், அதிக பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.