Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை!”.. இந்திய பெண்ணை தாக்கி கீழே தள்ளிய நபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறையால் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள Belsize Park என்னும் இடத்தில் பெட்ரோல் நிலையம் நடத்தி வரும் இந்தியாவை சேர்ந்த Nerali Patel என்ற 38 வயது பெண்ணை, ஒரு நபர் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் காலியாகும் நிலையில் இருந்திருக்கிறது.

எனவே, Nerali , ‘பெட்ரோல் இல்லை’ என்ற பலகையை வைத்து தடை போட்டிருக்கிறார். அதன்பின்பு, முன்பே காத்துக் கொண்டிருந்த இரண்டு நபர்களுக்கு இறுதியாக பெட்ரோல் போட்டிருக்கிறார். அப்போது, மேலும் இரண்டு நபர்கள் வைக்கப்பட்டிருந்த தடையை மீறி உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

அதில், ஒரு நபர், “நான் பெட்ரோல் போடுவதற்காக வந்திருக்கிறேன், போடாமல் போக முடியாது” என்று கூச்சலிட்டுக் கொண்டே பெட்ரோல் போடக்கூடிய குழாயை கையில் எடுத்திருக்கிறார். எனவே, Nerali, நீங்கள் அதை எடுத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதில், பெட்ரோல் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவரிடமிருந்து, குழாயை வாங்குவதற்கு முயற்சித்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், கடுமையான வார்த்தைகளால், இன ரீதியாக  அவரை விமர்சித்துள்ளார். மேலும் அந்த குழாயின் முனை பகுதியில் இருக்கும் உலோகப்பகுதியை கொண்டு அவரை தாக்கியுள்ளார். அதன்பின்பு, அவரை இழுத்து கீழேத் தள்ளியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து Nerali கூறுகையில், வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, உதவிக்கு எவரும் வரமாட்டார்கள். ஆனால், அங்கிருந்த மக்கள், நான் விழுந்தவுடன், அந்த நபரை தப்பிக்க விடாமல் பிடித்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு, காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |