6 வயது சிறுவனின் தாயார் கூறிய வார்த்தைகள் தற்போது உலக மக்களின் கவனத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் 6 வயது பள்ளி மாணவன் Mason Peoples வசித்து வருகிறார். அவரது பள்ளியில் நடந்த புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற Mason Peoples தமது முகத்தில் அணிந்திருந்த முககவசத்தை கழட்ட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் கூறியிருந்ததால் அவர் புகைப்படம் எடுக்கும் போது முககவசம் அணிந்து இருந்தார். இதனையடுத்து புகைப்பட கலைஞர் பல முறை மாணவனிடம் முககவசம் கழட்ட வலியுறுத்தினார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தாயார் சொல்வதை மறுக்க முடியாது என்பதால் Mason Peoples முககவசம் கழட்டுவதற்கு முன்வரவில்லை. இது குறித்து சிறுவனின் தாயார் நிக்கோல் கூறியதாவது “முககவசம் அணிவதின் பயன் குறித்து மகனிடம் கூறியுள்ளார். மேலும் முககவசம் அணிந்து கொள்வதால் நம்மை மட்டுமல்ல சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும் என அவர் தன் மகனிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கொரோனா நோய் தொற்றால் தன் சொந்த தாத்தாவை இழந்த Mason Peoples=க்கு பின் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தாயார் நிக்கோல் அடிக்கடி மகனுக்கு சொல்லி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி தன் மகனின் முககவச கதையை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த நிக்கோல் சிறுவனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனைதொடர்ந்து முககவசம் வாங்குவதற்காக 7 டாலர் தொகையை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற வேண்டி ஒரு குறிப்பிட்ட இணைய பக்கத்தில் நிக்கோல் பதிவு செய்துள்ளார். இதனால் சிறுவனின் முககவச கதை உலக மக்கள் பலரை திரும்பி பார்க்க செய்ததுடன் இதுவரை 25,693 டாலர் தொகை நன்கொடையாக வந்துள்ளது என நிக்கோல் தெரிவித்துள்ளார்.