Categories
அரசியல்

சேலம் மக்களே… உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… முதல்வர் ஸ்டாலின் கூறிய புது அப்டேட்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் பாராசூட், ராணுவ சீருடை மற்றும் ஹெலிகாப்டர் உதிரிபாக தொழில் தொடங்குவதற்கு அமோக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “சேலம் மாவட்டமானது தமிழக அளவில் தொழில் முனைவோருக்கான மையமாக விளங்குகிறது. இங்கு ஜவ்வரிசி, வெள்ளிக்கொலுசு பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு துறைகள் வளர்ந்து கொண்டு வருகிறது. மேலும் இங்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களாக 22,686 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டமானது மத்திய அரசு அறிவித்துள்ள ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இங்கு பாராசூட் தயாரிப்பு, ராணுவ சீருடை  தயாரிப்பு, ஹெலிகாப்டர் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழில்கள் அதிகமாக தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் 58.81 ஏக்கரில் சேலம் மாவட்டத்தில் பெரிய சீரகாபாடியில் மாபெரும் உணவு பூங்காவானது அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. இது போல் உணவு பூங்காவை கஞ்சநாயக்கன்பட்டி பகுதியிலும் அமைக்க உள்ளது” என்று பேசினார்.

Categories

Tech |