மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.. இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பொழிச்சலூர், ஊரப்பாக்கம், நல்லம்பாக்கம், கேளம்பாக்கம், வேங்கைவாசல் ஆகிய இடங்களில் ’உள்ளாட்சி உரிமைக்குரல்’ தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்..
முன்னதாக மநீம தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பொழிச்சலூர், ஊரப்பாக்கம், நல்லம்பாக்கம், கேளம்பாக்கம், வேங்கைவாசல் ஆகிய இடங்களில் ’உள்ளாட்சி உரிமைக்குரல்’ தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 30, 2021