Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பணம் வந்ததும் வாங்கி தரேன்” மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதிய செல்போன் வாங்கி தராததால் 10- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் ஏர்போர்ட் பகுதியில் காமராஜ் நகர் பாண்டியன் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார்.  இவரின் மகன் அருண் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்நிலையில் அருண் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.  அதற்கு அருணின் தந்தை பணம் இல்லை எனவும், பணம் வந்ததும் புதிய செல்போன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும்  புதிய செல்போன் வாங்கி தரும் வரை பழைய செல்போனை பயன்படுத்தும் படி பழனி  கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |