கவர்ச்சியான கண்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். இன்று எந்த விஷயங்களிலும் முடிவெடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உங்களுக்கு கிடைப்பது தாமதமாகத்தான் கிடைக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.
அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு தான் முன்னேற்றம் பெற முடியும். கொஞ்சம் கவனமாக பாடங்களைப் படியுங்கள். அதுபோலவே விளையாட்டு ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது, முக்கியமான பணியை செய்யும் பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கி உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக திகழும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்