மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுறத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முருகன் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.