சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த தங்கம்மாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பலத்தகாயமடைந்த துரைசாமியை மீட்டு அக்கம்பக்கத்தினர் நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வேலகவுண்டபட்டி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவரான வேலகவுண்டபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.