தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் துறையினருக்கு உதவிகள் கிடைத்து தொழில் சிறக்கும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுங்கள்.
இன்று பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். நிதானமாக வேலை செய்யுங்கள். இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை செய்யும்போதோ, முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். அனைத்து விதமான காரியம் நல்லபடியாக நடக்கும். தயிர் சாதத்தை தானமாக வழங்கினால் கர்ம தோஷங்களில் இருந்து விடுபட்டு செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்