Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “வேகத்தை குறைத்து”… விவேகத்துடன் செயல்படுங்கள்..!!

அழகான உடல் தோற்றத்தையும் அன்பான உள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நட்பும் வட்டம் விரிவடைந்து நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது. வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் வைப்பது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

அக்கம் பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். சொன்ன சொல்லை  நிறைவேற்றி இன்று சமூகத்தில் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ  முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை  அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதாவது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழ்வீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |