Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நினைத்த காரியங்கள் நடக்கும்”… சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.!!

சுறுசுறுப்பாக காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியவர் மூலம் அனுகூலமும் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் நல்லபடியாகவே இருக்கும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று தெளிவான சிந்தனையுடன் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் நீங்கள் மனதில் நினைத்த அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை நீங்கள் செல்வவளம் ஆக மாற்றிக்கொள்ளலாம். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |