‘இடிமுழக்கம்’ ரீமேக் படம் அல்ல என சீனு ராமசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் காயத்ரி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சௌந்தர்ராஜா, சுபிக்ஷா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#இடிமுழக்கம்
ரீமேக் படமல்லநானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை
இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம்
இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார்.நன்றி.https://t.co/HG9aVlacD6
https://t.co/2Frq05VRkb— Seenu Ramasamy (@seenuramasamy) September 29, 2021
இந்நிலையில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான லட்சியம் படத்தின் ரீமேக் தான் இடிமுழக்கம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இடிமுழக்கம் ரீமேக் படம் அல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம். இடம் பொருள் ஏவல் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். நன்றி’ என பதிவிட்டுள்ளார்.