Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “புதிய பதவி உங்களைத் தேடி வரக்கூடும்”… பயணம் செல்ல நேரலாம்..!!

கடுமையாக உழைக்க கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் கவலையை கொடுப்பதாக இருக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். உங்களுடைய நேர்மையான எண்ணத்தால் பலரும் தட்டி கழிக்கப்படுவார்கள். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். மன திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களை பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்கு பிடித்த -வர்களை சந்திக்க நேரிடும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது மட்டும் நல்லது. ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். ரகசியங்களை கையாளும்போது  மட்டும் தனி கவனம் உங்களுக்கு வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோல இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழலாம். இதை மட்டும் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |