அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் அஸ்வின். இதையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் .
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல் பாடலான ‘ஆசை’ என்ற அழகிய பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.