Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக கொடுக்கவில்லை…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கோட்டை, சொக்கு பிள்ளைபட்டி கிராமங்கள் இருகின்றது. இந்த கிராமங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில பொது செயலாளரான வீ.பி. ராமன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வளரும் தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளரான மலைச்சாமி, இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் கிராம மக்கள் வருவாய்த்துறையினரிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கிராம மக்களுக்கு உடன்பாடு ஏற்பட்டதால்  தாங்கள் கொண்டு வந்த மனுக்களை துணை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |