ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்து வந்த பெண்ணை அதன் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால், உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு புடவை அணிந்து சென்ற ஒரு பெண்ணை ரெஸ்டாரன்ட் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தன்னை எதற்காக ரெஸ்டாரன்ட் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் புடவை அணிந்து வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அந்த பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த சம்பவம் பொய்யானது என்று ரெஸ்டாரன்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரெஸ்டாரன்ட் செயல்படுவதற்கு சரியான உரிமம் இல்லாததால் அதை அடைக்குமாறு அதிகாரிகள் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து உரிமையாளரும் ரெஸ்டாரன்டை அடைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பின் அதே பகுதியை சுகாதார இன்ஸ்பெக்டர் வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருவதை கண்டு அதை அடைப்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனைதொடர்ந்து பொது சுகாதார இன்ஸ்பெக்டர் மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது அங்கு அப்படியே ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வந்ததால் அதை அடைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.