Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “இன்று நீங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு”… சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்..!!

மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய மகர ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான அதிகாரிகளின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறி ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று அனைத்து விஷயங்களையும் சாதகமாக பயன்படுத்தி முன்னேறி செல்வீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். மன திருப்தியுடன் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உறவினர் வகையில் உதவிகளும் கிடைக்கும். இன்று நீங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பான பெயர் எடுப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

உங்களுடைய செல்வாக்கும் உயரும். அனைத்து விஷயங்களையுமே இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். இன்று தன வரவு தாராளமாக இருக்கும். பணத்தை மட்டும் மற்றவர்கள் பார்வையில் படும் படி எண்ண வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினர் உடன் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று உடனிருப்பவர்களே உங்களுக்கு சிறு தொல்லை கொடுக்கக் கூடும். ஆகையால் அதிலும் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் செல்வ செழிப்பை சந்திக்கக்கூடும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |