Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காந்திஜெயந்தியை முன்னிட்டு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்றும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |