Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், தங்கை தேன்மொழியும்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஸ்டாலின் தான் நேரடியாக தேர்தல் பணிகளில்  ஈடுபடவிட்டாலும் உளவுத்துறை மூலம் களநிலவரங்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகிறார்.

உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போட்டில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர பிற மாநிலங்களில் திமுக வெற்றி பெற 80% வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் அதிமுக, பாமக கூட்டணியானது கலைந்திருப்பது திமுகவிற்கு ஏதுவாக கருதப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினிற்கு  களநிலவரங்கள் பற்றிய தகவல் சந்தோசம் அளிப்பதாக உள்ளதாம்.  திருநெல்வேலி, தென்காசியில் அதிமுகவை வெற்றி பெற உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இப்பணியை கனிமொழி சிறப்பாக செய்து வருகிறார்.

Categories

Tech |