பிக் பாஸ் சீசன் 5 யில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு கலந்துகொள்ளப்போவதாக தெரிய வந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்களின் பட்டியல் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்போதைய நிலவரப்படி, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி கனி, ஷகிலா மகள் மிலா, நிழல்கள் ரவி, நடிகை பிரியாராமன் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்டியலில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணுவின் பெயரும் சேர்ந்துள்ளது.