அரசு ஊழியர்களுக்கு நடப்பு மாதத்தில் சம்பளம் இரண்டு மடங்காக கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, அரசு ஊழியர்களின் சம்பளத்தை 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றது. மேலும் மத்திய அரசு விதித்துள்ள விதியின்படி அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி (DA) ஆனது 25 சதவீதத்தை தாண்டினால், வீட்டு வாடகைப்படி (HRA) 3 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த 2017-ல் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் அகவிலைப்படி 25 சதவீதம் அதிகமாகும்போது, வீட்டு வாடகைப்படி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. HRV ஆனது ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படும். இதற்காக பல்வேறு வகையான நகரங்களை மத்திய அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது.
இதையடுத்து புதிய மாற்றத்தின்படி X பட்டியலில் உள்ள நகரங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 27 சதவீதமாக உயர்த்தப்படும். இவை 50 லட்சத்துக்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும். ஆகவே Y பட்டியலில் உள்ள நகரங்களின் ஊழியர்களுக்கு 18 சதவீதம் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்படும். மேலும் Z பட்டியலில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 9 சதவீதம் வீட்டு வாடகைப்படியானது உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்பின் 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் Y பட்டியலில் அடங்கும். அதற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் Z பட்டியலில் அடங்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 1, 2021-லிருந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டு வாடகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இது ஆகஸ்ட் 2021 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நடப்பு மாதம் கொடுக்கப்படும் சம்பளத்தில் அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியானது உயர்த்தப்பட்டு 2 மடங்கு சம்பளம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அரசு ஊழியர்கள் இடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.