Categories
உலக செய்திகள்

உலகின் பணக்கார பட்டியல் வெளியீடு…. முதலிடத்தில் எலான் மாஸ்க்…. அமேசான் முன்னாள் நிறுவனருக்கு அனுப்பும் பரிசு….!!

உலகின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மாஸ்க் அமேசான் முன்னாள் நிறுவனரான ஜெப் பெஸோஸை பின்னுக்கு தள்ளினார்.

உலகின் பணக்காரர்கள் தரவரிசை பட்டியல் 10 முதல் 100 வரை வெளியிடப்படுவது வழக்கம். இந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மாஸ்க் முதலிடம் பிடித்துள்ளாார். இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது டெஸ்லா நிறுவனத்திற்குரிய பங்குகளின் விலை உயர்வால் எலான் மாஸ்க் 20,000 கோடி டாலர் சொத்துக்கள் கொண்டு முதல் பணக்காரராக இடம் பிடித்துள்ளார். மேலும் 2ஆம் இடம் பிடித்த ஜெப் பெஸோஸ்ஸின் சொத்து மதிப்பானது 19,200 கோடி டாலராக உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விண்வெளி ஆராய்ச்சி, தானியங்கி கார் உற்பத்தி உட்பட பல  துறையில் போட்டியிட்டு வருகின்றனர்.

தற்போது பிரபல ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் “எலான் மாஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்ததை கொண்டாட, அமேசான் நிறுவனருக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றில் 2ஆவது நம்பரை பொறித்து அனுப்புகிறேன்” என்றும் மேலும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் மெயில் என்ற பெயரை அதில் போட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |