Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டு அதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தோம். அதன் அடிப்படையில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை அலுவலர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது அந்த ஆலோசனையில் மாநில அரசின் வழிகாட்டுதல் படி சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதுமட்டுமில்லாமல் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக வளாகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என்று ஆட்சியர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பள்ளிக் கல்வி இயக்குநர்கள் பணியை மேற்கொள்வார்கள்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வரும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |