மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைக்கப்பட்ட கட்டண தொகை குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவக் காப்பீடு கட்டண தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு 2022 ல் நாட்டின் சரிபாதி மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2022-ல் சராசரியான மாதாந்திர மருத்துவ காப்பீடு திட்டத்தின் பிரீமியம் 315.30 ரூபாயாக இருக்கும் என அறியப்படுகிறது.
குறிப்பாக இந்த கட்டண தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் , மாநிலத்திற்கும் வேறுபடும். சுவிட்சர்லாந்தை பொருத்தவரை கடந்த 10 ஆண்டு மருத்துவ காப்பீடு கட்டண தொகை ஆண்டுதோறும் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காப்பீடு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்று தகவல் வெளியாயுள்ளது.ஆனால் இந்த கட்டண குறைப்பால் சுவிட்சர்லாந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.