திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மணிகண்டன் தயாரித்த பிரத்தியேக கருவியின் மூலம் நடைபெற்ற மீட்புப் பணி தோல்வியடைந்ததால், தற்போது ஐஐடி குழுவினர் கொண்டுவந்த நவீன கருவி மூலம் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த அந்த கருவி, 15 கிலோ எடைகொண்டதாகும். அந்த கருவியின் மூலம், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்க முடியும். மேலும் அந்த குழந்தையிடம் மைக் மூலம் பேசமுடியும். இந்த கருவிக்கான அங்கீகாரத்தை கடந்த 2013ஆம் ஆண்டில் ஐஐடி வழங்கியது.