தமிழகத்தில் கொரன் ஆச்சு வைத்தால் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் வீடுதேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழலையர் மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.