ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சியின் பிரதமராக இருக்கும் முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நகரங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று மக்கள் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமரான முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார்.
அதாவது, பிரதமர் MOI, MOD மற்றும் உளவுத்துறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் அனைவரும், பாதுகாப்புப் படையினரும், தனியார் வீடுகளிலிருந்து வெளியேறி, இராணுவ தளங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான சோதனை என்று கூறி காபூல் நகரத்திலும், அதனை சுற்றி அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களுக்குள் செல்வதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், யாரிடமும் வாகனங்களையோ அல்லது உபகரணங்களையோ பறிக்க எவருக்கும் அனுமதி கிடையாது என்றும் பிரதமர் முகமது ஹசன் அகுந்த் அறிவித்துள்ளார்.