தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதிக்கு திடீரென சென்றார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதல்வரிடம் பேச தயங்கிய மாணவர்களிடம், ஏன் பேச தயங்குகிறீர்கள், கூச்சப்படாம தைரியமாக கேளுங்கள்,உங்களோட குறைகளை எல்லாம் கேட்டு நிவர்த்தி செய்வதற்காக தான் நான் வந்திருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கூறினார். அதன் பிறகு மாணவர்கள், மின்விசிறி சரியாக ஓடவில்லை என்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருமாறும் கூறினார். அதற்கு முதல்வர், உடனே சரி பண்ண சொல்றேன் என்று மாணவர்களிடம் கூறிவிட்டு அனைத்து அறைகளையும் ஆய்வு செய்த பிறகு அங்கிருந்து கிளம்பினார்.