ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களுக்கு லிப்ட் மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை விதித்து மால் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஹோட்டலில் போய் சாப்பிடுவதை தவிர்த்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்கு வந்து விட்டோம். பலர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு தவிர்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ஸ்மோட்டோ, ஸ்விக்கி இந்த இரண்டு நிறுவனங்களே பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மால் ஒன்றில் மாலிலுள்ள உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு உணவை கொடுக்க வரும் டெலிவரி பாய்கள் லிப்ட் பயன்படுத்த அனுமதி கிடையாது மற்றும் டாய்லெட்களையும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது நவீன கால தீண்டாமையாக சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த செயலுக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.