ஜெனீவா மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் பல இடங்களில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்துள்ளது. அது எதற்காக என்று தெரியாத மக்கள், அதை எடுத்து பார்த்து விட்டு வேறொரு இடத்தில் கொண்டு வைத்து விடுகிறார்கள். எனவே, அதிகாரிகள் தயவுசெய்து அந்த பெட்டியை தொடாதீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அதாவது, புவி வெப்ப ஆற்றலை கண்டறிவதற்காகவும், நிலத்தின் அதிர்வுகளை கணக்கிடுவதற்காகவும் மாகாணம் முழுக்க சுமார் 20 ஆயிரம் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இது தான் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் அதனை வேறொரு இடத்தில் வைத்து செல்வதால் பெட்டிகள் சேகரிக்கும் தரவுகளில் பிரச்சனை உண்டாகிறது.
தற்போது மக்கள் அதை எடுக்காமல் இருப்பதற்காக நகரத்தின் மையப் பகுதிக்கு அதிகாரிகள் அதனை எடுத்துச்சென்றுள்ளார்கள். மேலும், அதனை யாரும் தொடுகிறார்களா? வேறு இடத்தில் வைக்கிறார்களா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், அதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
எனவே, அவை எங்கு உள்ளன? என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். இதனால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு அதனை எடுத்துச்செல்ல கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.