திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.
இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக் கோரி ட்விட்டரில் #savesujith என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் #PrayForSujith ஹாஷ் டேக்கில் ட்வீட் செய்து வருகின்றனர். இதில் பிரபலங்களும் அடங்குவர். சிறுவன் மீட்பு தொடர்பாக பிரபலங்கள் செய்த ட்விட்டர் பதிவுகள் உங்கள் பார்வைக்கு.
சிறுவன் சுஜித் நலமுடன் ஆள்துளை கிணற்றில் இருந்து விரைவில் மீட்கப்பட அனைவரும் பிரார்த்திப்போம். அதற்கு உதவும் அமைச்சர்கள், அரசு எந்திரங்கள், பணியாளர்கள், பொது மக்கள் அனைவரின் முயற்சி பெறும். சிறுவன் மீட்கப்படும் வரை அவனது பெற்றோருக்கு மனவுறுதியை இறைவன் அருள வேண்டும்.#SaveSujith
— R Sarath Kumar (@realsarathkumar) October 25, 2019
7மணி நேரமாக மீட்புபணி தொடர்கிறது.. நெஞ்சம் பதபதைக்கிறது..
விரைவில் மீட்கப்படவேண்டும் இறைவா..#SaveSujith https://t.co/fP6GH1VZK5— Cheran (@directorcheran) October 25, 2019
குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் … all our prayers with you #prayforsujith#SaveSujith pic.twitter.com/FZWgwG9IB1
— G.V.Prakash Kumar (@gvprakash) October 25, 2019
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறுக்காக போடப்பட்ட துளையில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை விழுந்து சிக்கிக் கொண்டதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. மீட்புக்குழுவினர் விரைவாகவும், விவேகமாகவும் செயல்பட்டு அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 25, 2019
lets all pray god #SaveSujith I have strong confidence child will be rescued safely very soon
— JSK Satishkumar (@JSKfilmcorp) October 25, 2019