Categories
உலக செய்திகள்

பெண்கள் பூட்ஸ் அணிந்து, இளைஞர்களை தூண்டுகிறார்கள்.. -தலீபான் ஊடகப்பேச்சாளர்..!!

தலிபான்களின் ஊடகப் பேச்சாளர், பெண்கள் பூட்ஸ் காலணி அணிந்து, இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தை தூண்டுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஷரியத் சட்ட அடிப்படையில் பெண்களுக்குரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது பள்ளிகளுக்கு செல்ல மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தலிபான்களின் ஊடகப்பேச்சாளர், ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களுக்குரிய கட்டுப்பாடுகள் பற்றி விவரித்திருக்கிறார்.

அதன்படி, முதலில், பெண்கள் அணியக்கூடிய உடை அதிகமாக ஈர்க்கும் படியான நிறத்தில் இருக்கக்கூடாது. இரண்டாவதாக, பெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தியிருந்தால், வெளியில் வரக்கூடாது. மூன்றாவதாக, பெண்கள் பூட்ஸ் காலணி அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பூட்ஸிலிருந்து வரும் சத்தம், இளைஞர்களுக்கு பெண்கள் தரும் சிக்னல். இவ்வாறான சத்தத்தை பெண்கள் வெளிப்படுத்தி, இளைஞர்களை தவறாக செயல்பட தூண்டுகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |