பெங்களூருவில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒன்பது மாத குழந்தை கழுத்து நெறித்து கொள்ளப்பட்டது அம்பலமாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரான சங்கர் மற்றும் இவருடைய மனைவி பாரதி இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இரு மகள்களும் மது சாகர் என்ற மகனும் மற்றுமொரு ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பாரதி, சிஞ்சனா, சிந்து ராணி, மது சாகர் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினார். 9 மாத ஆண் குழந்தை கட்டிலில் பிணமாக கிடந்தது. சிஞ்சனாவின் 2வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது . இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதால் 9மாத குழந்தை பசியால் இறந்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிந்து ராணியின் 9 மாத குழந்தை பசியால் இறக்கவில்லை என்றும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது . குழந்தையைகொலை செய்துவிட்டு பின்னர் சிந்து ராணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.