நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனிடையே நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் நியூசிலாந்து அணியின் மூத்த வீரரான டிம் சவுதி அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமை மருத்துவர் கூறுகையில், வில்லியம்சனை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கூடிய விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.மேலும் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதே போல் நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷாம் மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து டி20 அணி விபரம்: டிம் சவுதி (கே), ட்ரெண்ட் போல்ட் (இறுதி இரண்டு போட்டிகளுக்கு), கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன் (முதல் மூன்று போட்டிகளுக்கு), மார்ட்டின் கப்டில், ஸ்காட் குகலீஜ்ன், டேரில் மிட்செல், கோலின் மன்றோ, ஜிம்மி நீஷாம், மிட்செல் சாண்ட்னர், டிம் சீஃபர்ட் , இஷ் சோதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னர். இதில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கடைசி இரண்டு போட்டிகளிலும், லாக்கி பெர்குசன் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICYMI 👇https://t.co/LS01jw4x0o
— ICC (@ICC) October 25, 2019