தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை என்ற பகுதியில் தமிழ்நாடு சார்பில் டிரைலத்தான் போட்டிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வும் இந்த போட்டிகள் முடிந்த பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை விளக்கம் அளித்துள்ளது.