கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் ஏழை எளிய மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் நுழையும் வகையில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும், ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினர். இதனையடுத்து 2 ஆண்டு கால ஆராய்ச்சி படிப்பிற்கு 3-வது ஆண்டு கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி அறிக்கையை 6 மாத காலம் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலும் கால அவகாசம் அளித்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சங்க செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதிநாயகம், துணை தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.