Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்  9 மாவட்டங்களுக்கு வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம்  உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வண்ணம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளன. அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பற்றி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதைஅடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும். மேலும் தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தவித புகாரும் இல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |