Categories
மாநில செய்திகள்

மீட்பு பணியில் நீடிக்கும் சிக்கல்……. குழந்தை சத்தம் கேட்கவில்லை…….. அமைச்சர் தகவல்….!!

ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித் சத்தத்தை தற்பொழுது கேட்க முடியவில்லை என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். குழந்தையை  மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 15 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

Image result for சுஜித் அமைச்சர்

இந்நிலையில் குழந்தை மீட்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்புப் பணியின் போது மண் சரிந்ததால் 70 அடியில் சிக்கியுள்ளார். மேலும் ஆழ்துளை கிணற்றில் மண் மூடி உள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது மட்டுமல்லாமல், குழந்தை  சுர்ஜித்தின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து குழந்தையை மீட்க தீவீர முயற்சி எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |